3.மாலியமும் வேதங்களும்
3.மாலியமும் வேதங்களும்
வேத சாத்திரங்களை அடிப்படையாய்க்கொண்ட இந்து தருமம்தான் சனாதன தருமம். சனாதன தருமம் எனில் "என்றும் உள்ள வழி. தொடக்கமின்றித் தொடரும் கொள்கை." வாழும் வழிமுறைகளைத் தன்னிடத்தே கொண்ட, தனி மனிதனால் ஆரம்பிக்கப்படாத ஒன்று.வேதம் என்பது ஸ்ரீநாரயணனால், தன் மகனான பிரம்மாவைத் தன் தொப்பூழ் கொடியில் படைத்து, அவருக்கு உபதேசித்ததேயாம். என்ன உபதேசிக்கப்பட்டது? இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம்.
ஐம்பூதங்கள்,அகங்காரம்,மகத்,பிரகிருதி ஆகிய எட்டுமே அன்னத்தின் கால்களாம்.






4 மறுமொழிகள்:
ஹம்ஸாவதாரத்திற்கு எட்டுக் கால்கள் என்பதும் அந்த எட்டுக் கால்கள் யாவை என்பது எனக்குச் செய்தி. மிக்க நன்றி ஐயா.
அன்பு குமரன்
நன்றி
அய்யா,
வேதம் என்னும் வார்த்தை "vid" அதாவது அறிதல்(to know) என்னும் பொருள்படும் சம்ஸ்கிரத வார்த்தையில் இருந்து வந்தது என்று "A Paper on Hinduism" இல் கூறியுள்ளார் விவேகானந்தர்
அன்பு சமுத்ரா,
புராண, இதிகாசங்களில் குறிப்பிட்டபடி ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து வந்ததாக எழுதியுள்ளேன்.
காலங்கள் மாறுகின்றன. விவேகாநந்தர் மேற்கோள் காட்டியிருப்பது செங்கிருதச் சொல்லாம் "வித்". அதாவது , வித் எனும் சொல்லில் இருந்து வேதம் வந்தது என்கிறார். அது அப்படியே யிருப்பினும், செங்கிருதம் உண்டானது ஸ்ரீமன் நாராயணனிடமிருந்துதானே. அம்மொழியில்தான் வேதங்கள் உபதேசிக்கப் பட்டது.
Post a Comment
<< இல்லம்