Click Here for Free Traffic!
Click Here for your Free Traffic!

Your Ad Here

6. தாள் எறியால் நெற்றி வடு

6. தாள் எறியால் நெற்றி வடு
*******************************

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1)
மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2)
மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில்
செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க,
செழுங் கோயில் அரையர்(4) வந்து
"எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை
எங்கள் முனம் பொய்யா ன..தோ?"(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட
எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், "நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?" என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

1. கீழ்வீடு - 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் - மால்மேகன்

2. வளநாடன் - சோழன்
3. சென்னி - பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் - திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. "பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?" என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் - கைத்தாளம்
7. திகிரி - சக்கரம்.

10 மறுமொழிகள்:

At 6:11 AM, Anonymous G.Ragavanசொல்லுவது என்னவெனில் ...

ஐயா இந்தப் பாடல் எந்த நூல்? மதிலுடைத்த சோழன் எந்தச் சோழன்? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.

சென்னி என்பது பரம்பரைப் பெயரா? சென்னி என்றால் நெற்றி. அது எப்படிப் பரம்பரைப் பெயரானது?

 
At 6:12 AM, Anonymous kumaranசொல்லுவது என்னவெனில் ...

ஐயா. நான் இந்தக் கதையும் படித்திருக்கிறேன். சோழர்கள் சைவ சமய சார்பாளர்களாக இருந்தாலும் பலர் மற்ற சமயங்களைப் பொறுத்துக் கொண்டார்கள். சில பேர் இப்படி மதில் உடைத்தும் பெருமாள் சிலையை கடலில் எறிந்தும் இராமானுஜரை ஊரைவிட்டு துரத்தியும் இருக்கிறார்கள்.

குலோத்துங்க சோழன் திருச்சித்ரகூடத்தில் இருந்த கோவிந்தராஜர் சிலையை 'கடலில் பள்ளி கொண்டவன் கடலில் சென்று பள்ளி கொள்ளட்டும். சிதம்பரத்தில் இடமில்லை' என்று கடலில் தூக்கியிட்டான்.

அடியார் எறிந்த தாளத்தால் வந்த வடுவைப் பெருமையுடன் தாங்குகிறானே அவன் கருணையே கருணை.

 
At 6:12 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்பு குமரன்,
மிக்க நன்றி.
அந்தப் பாடலைத் தேடிக்கொண்டுள்ளேன்.
இராகவன் கேட்டிருந்தார். உடல் நலமின்மை காரணமாகக் கொஞ்சம் ஊன்றிப் பார்க்க முடியவில்லை.
தேடி எடுத்துப் போடுகிறேன்.

 
At 6:12 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்பு இராகவன்,
இன்னும் ஓரிரு நாட்களில் "சென்னி" விளக்கம் தருகிறேன்.

 
At 6:13 AM, Anonymous ''Maraboor'' JCசொல்லுவது என்னவெனில் ...

Dear Sir,
The irony is, during a recent temple visit to Thirukovur near Porur,Chennai, the Karunaakara temples' pillars were taken away by the nearby Shiva temple authorities for uplifting the Shiva shrine. Again,It is Karunakara Perumaal, who was kind enough to donate the pillars to his brother in law!!
Still many such pillars (carrying historic importance) lie around the temple campus.!! Your articles make us learn both good tamil as well as improveour insights in religion!!

 
At 6:13 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

My dear "maraboor"jc,

//. Again,It is Karunakara Perumaal, who was kind enough to donate the pillars to his brother in law!!//

Neither Perumaal, nor Siva is indulged in this type of activities. Our people are doing this. However, Perumal is richer than Sivaa.

//Your articles make us learn both good tamil as well as improveour insights in religion!!//

Thanks alot.

 
At 10:53 PM, Blogger ENNARசொல்லுவது என்னவெனில் ...

/திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி, செங்கோல்-அது ஓச்சிக்
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி!/
என சிலப்பதிகாரத்தில் வருகிறது
கரிகாலனின் தந்தை பெயர் இளஞ்சேட்சென்னி அவன் கோவிலை இடித்ததாக நான் கேள்விப் பட வில்லை ஆனால்
/ சிவபிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழநாட் டெல்லையில் இராதபடி செய்தும் தில்லை முன்றிலிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்தழித்ததும் அறியாதார் யார்? அத்தகைய சிவத்தொண்டன் கால் வழியிற் பிறந்த நீ அவற்குச் செய்யவேண்டிய கடமையினையும் நினைத்துப் பார்./என மூன்றாம் குலோத்துங்கனிடம் சொல்கிறார்கள் முதாலம் அல்லது இரண்டாம் குலோத்துங்கன் தான் அதை அவ்வாறு செய்திருக்க முடியும்
http://merkondar.blogspot.com/2006/04/3.html

 
At 11:01 PM, Blogger ENNARசொல்லுவது என்னவெனில் ...

ராகவன்
//சென்னி என்பது பரம்பரைப் பெயரா? சென்னி என்றால் நெற்றி. அது எப்படிப் பரம்பரைப் பெயரானது?//

சென்னி என்றால் சோழன் இல்லையா?

/தெண்ணீர் நறுமலர்த்தார் சென்னி இளவழகன்
மண்ணகம் காவலனே என்பரால், மண்ணகம்
காவலனே ஆனக்கால் காவானோ மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்.

(தெண்ணீர் - தெளிந்த நீர்
நறுமலர் - இனிய வாசனையை உடைய மலர்(கள்)
தார் - மாலை
சென்னி - சோழன்
மண்ணகம் - நிலம் / பூமி
என்பரால் - என்பார்கள்
காவலனே ஆனக்கால் - காவலனாக இருந்தால்
காவானோ - காக்கமாட்டானோ
கோவலர் - பசுக்கூட்டங்களின் மேய்ப்பர்கள்)/
எனது கருத்தும் சென்னி என்றால் சோழன் தான்

 
At 11:06 PM, Blogger ENNARசொல்லுவது என்னவெனில் ...

//3. சென்னி - பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)//

சென்னி மகன் கரிகாலன் ஆண்டதும் உறையூர் தான். ஆனால் அவன் கோயில் மதிலை இடித்ததாகத் தெரியவில்லையே சரி அந்த பாடலை பாடிய புலவர் யார்?

 
At 12:08 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்பு என்னார்,
கருத்துக்களுக்கு நன்றி. சரித்திரத்தில் புலமை இல்லை. அந்த சென்னி யாரெனவும் தெரியவில்லை.

 

Post a Comment

<< இல்லம்